நினைவலைகள் - வேலுமணி


எம் தோழமைகளே 

மலரும் நினைவுகள்

இன்று என் மனதை விட்டு

விலக மறுக்கின்றன

ஒரு கூட்டுப் பறவைகளாய்

சிறகடித்து மகிழ்ந்த நாட்கள்

அனேகமாய் அனைவருக்குமே  (விடுதி)
அது தான் வீட்டை விட்டுப் பிரிந்து வந்த

முதல் தருணம்

பழகிய இடம், பழகியமுகம் ,பிரிந்து 

புதிய உலகிற்குள் நுழைந்து

நட்பு மெதுவாய் துளிர்விட்டது
விட்டுக் கொடுத்தலையும்

ஒத்துப்போதலையும் போதித்த இடம்

எங்கள் விடுதி

பகிர்ந்து கொண்டோம்

எண்ணங்களையும்

பாடக்கருத்துக்களையும்

மகிழ்ச்சியைப் பகிர்ந்து
பலமடங்காக்கினோம்

கவலைகளை பகிர்ந்து

அவற்றை காணாமல் போகச் செய்தோம்
வீட்டின் கொண்டாட்டங்கள்

அனைத்தும் விடுதிக்கு மாறின

கார்த்திகை தீபத்திற்கு  விடுதியை

அலங்கரித்து விளகேற்றிய நாட்கள்

ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின்போதும்

என் மனதில் நினைவுச் சுடராகிறது

இரவு முழுக்க

ஒப்படைப்புகளையும்

படத்தொகுப்புகளையும்

தயாரித்துக் கொண்டே

எத்தனை உரையாடல்கள்

விவாதங்கள் …… இவற்றோடு

எங்கள் சங்கரியின் பாடல்கள் ……

சுந்தர தெலுங்குப்பாடல்கள்

மயங்கி அவற்றை அத் தோழிகளிடம்

எழுதிவாங்கி

பாடிப்பழகி

அப்பப்பா

நித்தம் நித்தம் எங்களுக்கு

புத்தம் புது அனுபவங்கள்தான்

விடுதி வாழ்க்கக்நிறைவாய்

வாழ்ந்ததாலோ என்னவோ

வகுப்பு தோழமைகளுடன்

அதிக நெருக்கம் இல்லாமல் போயிற்று (எனக்கு)

அவர்களுடனும் அதிக நேரம் செலவிட்டிருக்கலாம்

என்ற சிறிய நெருடல் மனதில்

அதைப்போக்க இந்த

25 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

அரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது

தினம் தினம் மாணவர்களை சந்திக்கும்

எமக்கு நமது மாணவர் பருவத்தை அசைபோடும்

அழகான  நாட்களாயின இந்த ஒருமாத காலமும்

பாதை வேறு பயணம் வேறு

அனுபவங்களும் வேறு வேறு

எப்படி இருக்கும் இந்த சந்திப்பு

என்ற என் மனதின் சந்தேகம்

துாள் துாளாய் தகர்ந்தது

என் நட்புகளின் குரல் கேட்ட

நொடியில்

அன்று பிரிந்தோம்

செல்லும் பாதை பற்றிய

பயத்துடனும்….

மீண்டும் சேருவோமா

என்ற ஏக்கத்துடனும்

மீண்டும் கூடிப்பிரிய போகிறோம்

அடோபர் 21ல்ஆனால் அன்று

நமது தனிப்பட்ட நட்பு

நம் குடும்பங்களின் நட்பாக

மலர்ந்த பெருதிதத்துடனும்

என்றும் மங்கா பொலிவுடனும்

நீடித்து நிலைக்கும்

என்ன மகிழ்வோடு எப்பொழுது வேண்டுமானாலும்

சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையோடு

                                                         அன்புடன் வேலுமணி (1991-93 ) 

                                    
                                                                     DIET   KRISHNGIRI

























Comments

  1. என்றும் இந்த நினைவில் மகிழ்வும் வாழ்த்துக்கள். கனியமுது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெள்ளிவிழா 1991-93 diet தற்போதய ஆசிரியர்களும் விருந்தினர்களுக்கும் மரியாதை

நாங்கள் எங்கள் ஆசான்களுடன் 1991-93 வெள்ளிவிழா